சந்தேகம்
UPDATED : அக் 04, 2024 | ADDED : அக் 04, 2024
நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்த போது, ''மறுமை நாள் எப்போது வரும்'' என சந்தேகம் கேட்டார் ஒருவர். ஆனால் பதில் அளிக்காமல் பேச்சை தொடர்ந்தார். இதைப் பார்த்த சிலர், ' நாயகம் பதிலளிக்க விரும்பவில்லை' எனக் கருத்து தெரிவித்தனர். பேசி முடித்ததும் சந்தேகம் கேட்டவரை பார்த்து, ''நம்பகத்தன்மை, நேர்மை, உண்மை போன்ற நற்பண்புகள் குறையும் போது மறுமை நாள் வரும்'' என்றார்.