உள்ளூர் செய்திகள்

இரக்கமே காரணம்

'சூரியன் இவ்வளவு துாரமாக இருக்கும் போதே அதன் சூட்டை தாங்க முடியவில்லையே. அதைச் சுமந்து கொண்டிருக்கும் வானவர் எப்படிச் சகித்துக் கொள்கிறாரோ' என இத்ரீஸ் நபி உச்சி வெயிலில் நடந்து செல்லும் போது வருந்தினார். பின் 'சூரியனைச் சுமக்கும் வானவருக்கு கருணை செய்வாயாக' என துஆ செய்தார். பின் அந்த வானவர், 'சூரியனால் ஏற்பட்ட சூடு குறைந்து விட்டதே... என்ன காரணம்' என இறைவனிடம் கேட்டார். அதற்கு அவன், 'உம் மீது இத்ரீஸ் கொண்ட இரக்கமே' என்றான்.