சேர்ந்து வாழுங்கள்
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
மனைவி, குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு கணவனை சார்ந்தது. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய தேவைகளை நிறைவேற்றித் தர அவன் கடமைப்பட்டிருக்கிறான். அதற்காக பணம் சம்பாதிப்பதாகச் சொல்லி மனைவி, குழந்தைகளை விட்டு நீண்டகாலம் பிரிந்திருக்க கூடாது. மனைவியுடன் சேர்ந்து வாழ்வது கணவரின் கடமை. அவசியமான காரணம் அல்லது தடையேதும் இல்லாத பட்சத்தில் குடும்பத்தை விட்டு பிரியாதீர்கள். 'கணவனின் வசதிக்கு ஏற்ப எங்கு இருக்கிறீரோ அங்கேயே மனைவியை வசிக்கச் செய்யுங்கள்'.