சிறந்த வழி
UPDATED : டிச 20, 2024 | ADDED : டிச 20, 2024
இறைவனை வணங்குவது, தொழுகை செய்வது, ஜகாத் கொடுப்பது போல உறவினர்களுடன் இணைந்து வாழ்வது முக்கிய கடமை. சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து வாழ்பவன் நரகத்தில் இருந்து தப்பித்து விடுவான். நீண்ட ஆயுளுடன் வாழ்வான். தோழர் அபூஹுரைரா உறவுகளை புறக்கணித்தவர் இருக்கும் போது இடத்தில் துஆ செய்ய மாட்டார். காரணம் அவனின் அருள் இறங்குவதை அந்த நபர் தடை செய்வார்.