பணத்தாசை
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
எந்நேரமும் பணத்தைப் பற்றியே மனிதன் சிந்திக்கிறான். அந்தப் பணம் கிடைத்த பின்னும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் போதாது என்றே ஏங்குகிறான். தேடிய பணத்தை மண்ணிலேயே விட்டு விட்டு முடிவில் இறக்கிறான். பணத்தாசைக்கு இடம் கொடுத்தால் இரக்க குணம் இருக்காது. கஞ்சத்தனம், குரூர சிந்தனை ஏற்படும். பாவச் செயல்களில் ஈடுபட நேரிடும். எனவே பணத்தாசை வேண்டாமே.