உள்ளூர் செய்திகள்

எச்சரிக்கை

'உன்னுடைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆயிடுச்சு. மளிகை சாமான்கள் தீருது'' என மனைவி மீது கோபப்பட்டான் நிஷார். 'எங்க சொந்தக்காரங்க வந்தா உங்களுக்கு பொறுக்காதே' எனக் கத்தினாள் மனைவி ஆபிதா. அவனும் பதிலுக்கு கத்தினான். குடும்பத்தில் மட்டுமல்ல. எங்கு வாக்குவாதம் செய்தாலும் விபரீதம் தான். இப்படித்தான் ஒருமுறை குர்ஆனின் வசனம் ஒன்றைப் படித்து விட்டு இரு நபர்கள் விவாதித்தனர். சற்று தள்ளி இருந்த நபிகள் நாயகத்திற்கு இவர்களது கூச்சல் கேட்டது. ''உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் கருத்து வேற்றுமை கொண்டதால்தான் அழிந்து போயினர். நீங்களும் வீண் தர்க்கத்தில் ஈடுபட்டு அழிந்து விடாதீர்கள்'' என எச்சரிக்கை செய்தார்.