தாயின் காலடியில்...
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
கருவில் சுமந்த தாய், தோளில் துாக்கி வளர்த்த தந்தையை ஒதுக்கி விட்டு வாழும் பிள்ளைகள் பெருகிவிட்டனர். 'பெற்றோரிடம் அன்புடன் நடங்கள். அவர்கள் முதுமை அடைந்த நிலையில் பணிவு, கருணையுடன் இருப்பீராக' என்கிறது குர்ஆன். தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது. தாய்க்குச் செய்யும் சேவையால் பெறும் மனநிறைவு சுவனத்திற்கு ஈடானது. வாலிப வயதில் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் வயதாவோம் என்பதை உணருங்கள். பெற்றோரை நேசியுங்கள்.