உள்ளூர் செய்திகள்

நல்லதை மட்டும்...

ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். இது நாம் செய்யும் எந்த செயலுக்கும் பொருந்தும். அதற்குரிய பலனை வேறு யாருக்கும் மாற்றி விட முடியாது. இதை குர்ஆன், 'சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்' என்றும், 'ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்கு அவனே பொறுப்பாளியாக இருக்கிறான்' என்கிறது.நல்ல செயல்களைச் செய்தால் அதன் பலன் பலரைச் சென்றடையும். அதை செய்தவனும் நற்கூலி பெறுவான். எனவே நல்லதை மட்டும் செய்யுங்கள்.