சொன்னால் போதாது
UPDATED : ஏப் 03, 2025 | ADDED : ஏப் 03, 2025
சொல்லும், செயலும் ஒரே விதமாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் தன்னை நல்லவனாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வர். 'மனைவியின் மனதை காயப்படுத்தாதே; குழந்தைகள் மீது அன்பு காட்டு. மதுவைக் குடித்து உன் உடல்நலனை கெடுக்காதே' என நண்பர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறுவார் ஒரு நபர். ஆனால் அவரது வீட்டிற்குச் சென்றால் அவர் சொன்னதற்கு மாறாக நடப்பார். இப்படிப்பட்டவருக்கு நரகத்தில் கொடிய தண்டனை காத்திருக்கிறது. இவர் இறந்த பிறகு நரக நெருப்பில் துாக்கி எறியப்படுவார். அப்போது அவரது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். நல்லதை சொன்னால் மட்டும் போதாது. அதை பின்பற்ற வேண்டும்.