உள்ளூர் செய்திகள்

வெற்றியும் தோல்வியும்

வாழ்வில் வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும் என நினைக்கக் கூடாது. தோல்வியையும் ஏற்கப் பழகுங்கள். இது குறித்து குர்ஆன் சொல்வதை படியுங்கள். 'இப்போது உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன் உங்கள் எதிரணியில் இருப்போருக்கும் காயம் ஏற்படத்தான் செய்தது. நன்மை, தீமையை மக்களிடையே மாறி மாறி வரச் செய்கிறோம். காரணம் இந்த இரண்டின் மூலம் மனிதனை பக்குவநிலைக்கு ஆளாக்குகிறான். உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதையும், சத்தியப்பாதையில் யார் நடக்கிறார்கள் என்பதையும் உணர்த்த விரும்புகிறான்.