உள்ளூர் செய்திகள்

திருத்திக் கொள்

மன்னராக இருந்து பின்பு ஞானியாக மாறியவர் ஹஜரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம். ஒருநாள் அவரை சந்தித்த சில இளைஞர்கள், ''எந்த தேவைக்காகவும் என்னை நோக்கி பிராத்தனை செய்யுங்கள். நான் நிறைவேற்றுகிறேன் என்கிறான் இறைவன். ஆனால் நாங்கள் காலை, மாலையில் துஆ செய்தும் அருளை பெற முடியவில்லையே'' எனக் கேட்டனர். ''பத்து வகையான காரணங்களால் உங்களின் இதயத்தின் ஒளி மங்கி விட்டது. அத்தகைய இருளடைந்த இதயத்தில் இருந்து வரும் பிராத்தனையை அவன் ஏற்பதில்லை'' என்றார். 1. இறைவனை நீங்கள் வணங்குகிறீர்கள். ஆனால் அவன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்லை. 2. குர்ஆனை ஓதுகிறீர்கள். அதில் சொல்லப்பட்டுள்ள போதனையைப் பின்பற்றுவதில்லை. 3. நபிகள் நாயகத்தின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். அவர் சொன்னவழியில் நடப்பதில்லை. 4. ஷைத்தானை பகைவன் என்கிறீர்கள். தினமும் அவனையே பின்பற்றி நடக்கிறீர்கள்.5. சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகிறீர்கள். அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை. 6. நரகத்திற்கு செல்ல பயப்படுகிறீர்கள். ஆனால் பாவச்செயல்களில் ஈடுபடுகிறீர்கள். 7. மரணம் நிச்சயம் என்பதை உணர்கிறீர்கள். அது நிகழ்வதற்குள் நற்செயலில் ஈடுபட தயங்குகிறீர்கள். 8. பிறர் மீது குறை சொல்கிறீர்கள். உங்களின் குறைகளை உணர மறுக்கிறீர்கள். 9. அவன் தரும் உணவை தினமும் உண்கிறீர்கள். ஆனால் நன்றியுடன் இருப்பதில்லை.