பொறுப்பாக இரு
UPDATED : மே 08, 2025 | ADDED : மே 08, 2025
மனிதன் தனக்குரிய கடமையில் அக்கறையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் மறுமை நாளில் அனைவரும் அவரவர் கடமை குறித்து விசாரணை செய்யப்படுவர். நாட்டில் வாழும் மக்களின் வாழ்விற்கு அந்நாட்டின் தலைவரே பொறுப்பு ஆவார். அதே போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்பத் தலைவரே பொறுப்பு. பணியாளரின் வாழ்விற்கு எஜமானரும், ஒரு பெண்ணின் நலனுக்கு அவளின் கணவரும் பொறுப்பாவர். பொறுப்பை தட்டிக் கழித்தால் மறுமையில் அதற்கான தண்டனை கிடைக்கும்.