என்ன நன்மை
UPDATED : ஜூன் 05, 2025 | ADDED : ஜூன் 05, 2025
ஒருமுறை நபிகள் நாயகத்திடம், ''குர்பானி என்றால் என்ன'' எனத் தோழர்கள் கேட்டனர். '' நபி இப்ராஹிம் (அலை) சொன்ன வழிமுறை'' என பதில் அளித்தார். ''அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்'' என தோழர்கள் மீண்டும் கேட்டனர். ''குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை கிடைக்கும். இந்நாளில் அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில் வசதி உள்ளவர்கள் ஆட்டை குர்பானி கொடுங்கள். அதன் கறியை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள்'' என்றார் நாயகம்.