உள்ளூர் செய்திகள்

மூன்று பங்கு

பக்ரீத் அன்று பலியிடுவது சிறப்பானது. இந்நாளில் ஆடு, ஒட்டகத்தை பலியிடுவது அவசியம். அந்த இறைச்சியை மூன்று சம பங்காகப் பிரிக்கின்றனர். ஒரு பங்கை அண்டை வீட்டார், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களின் குடும்பத் தேவைக்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பலியிடப்படும் ஆடு உடற்குறை இல்லாமலும், ஒரு வயது முடிந்ததாகவும் இருப்பது அவசியம்.