உள்ளூர் செய்திகள்

அறிவுரை

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் ஹஜ் பயணம் செய்தார் நபிகள் நாயகம். அப்போது ஹஜ்ஜின் வழிமுறைகளை எல்லாம் நிறைவேற்றியதோடு முக்கிய செய்தி ஒன்றைச் சொன்னார். 'என்னிடம் இருந்து ஹஜ்ஜின் சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு இன்னொரு ஹஜ் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்குமா... என்பதை அறிய மாட்டேன்' என்றார். சொன்னது போலவே ஹிஜ்ரி பதினொன்றாம் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் உயிர் நீத்தார். இந்தப் பயணத்தில் அவர் அரபாத் திடலில் நடத்திய சொற்பொழிவு சிறப்பு வாய்ந்தது.