உள்ளூர் செய்திகள்

எச்சரிக்கை

மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் காது சிறந்த அருட்கொடை. அதன் மூலமே மற்றவர்கள் பேசுவதை கேட்கிறோம். மறுமை நாளில் செவிப்புலனின் (காது) மனிதன் பயன்படுத்திய விதத்தை பற்றி விசாரணை நடத்தப்படும் என எச்சரிக்கிறது குர்ஆன். வாயால் தவறான சொற்களை பேசக் கூடாது, கண்கள் தவறானதை பார்க்கக் கூடாது என விழிப்புடன் செயல்படுகிறோம். ஆனால் தவறான விஷயங்களை காதால் விரும்பிக் கேட்கிறோமே என யாரும் வருந்துவதில்லை. இனியாவது நல்ல விஷயங்களை மட்டும் கேட்போம்.