தினமும் என்னைக் கவனி
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
உலகம் இனிமையானது. கவர்ச்சியானது. ஆனால் நிலையற்றது. இப்படிப்பட்ட உலகில் தான் மனிதன் வாழ்கிறான். அதன் அழகில் மயங்கி மனதை பறி கொடுக்கக்கூடாது. ஆனாலும் சிலர் உலகம் நிலையானது எனக் கருதி பணத்தை தேடி அலைகிறார்கள். பணம் சேர்ந்ததும் பாதுகாப்பு கிடைத்துவிட்டதாக நம்புகிறார்கள். இதை மறுக்கிறார் இப்ராஹீம் நபி. மறுமை நாளில் பிள்ளைகளால், பணத்தால் எந்தப் பயனும் கிடைக்காது. நல்ல மனம் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு ஈடேற்றமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்கிறார். 'தினமும் என்னைக் கவனி' என்கிறது மனம். அதன் நலனில் அக்கறை செலுத்தி நல்லவனாக வாழுங்கள்.