உள்ளூர் செய்திகள்

அதுவும் தர்மமே

' ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவரவர் கடமை'' என நபிகள் நாயகம் அறிவுரை கூறினார். அதைக் கேட்ட ஒருவர், ''தர்மம் செய்ய எனக்கு வழி இல்லை. என்ன செய்யலாம்'' எனக் கேட்டார்.''உழைத்து உதவுங்கள்'' ''உடல் வலிமை இல்லாவிட்டால்'' எனக் கேட்டார் அந்த நபர். ''பிறருக்கு நல்லதைச் சொல்லுங்கள். முடியாவிட்டால் தீமை செய்யாமல் இருங்கள். அதுவும் தர்மமே'' என்றார்.