உள்ளூர் செய்திகள்

கோபம் வருதா...

நாம் சிலரை பார்த்திருப்போம். கோபம் வந்து விட்டால் போதும். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிறர் மீது எரிந்து விழுவர். உண்மையில் கோபப்படுபவர்தான் உடல்நலத்தை தானே கெடுத்துக் கொள்கிறார். இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு கோபம் வருகிறது என்றால் அவருக்கு நிறைவேறாத ஆசை இருப்பதாக அர்த்தம். எனவே ஆசைகளை குறையுங்கள். உதாரணமாக 'அவர் உதவி செய்வார், பணம் கொடுப்பார்' என்ற எதிர்பார்ப்பை குறையுங்கள். இப்படி செய்தால் தானாகவே கோபம் மறையும்.