மனம் உருகியது
UPDATED : நவ 20, 2025 | ADDED : நவ 20, 2025
புதர் ஒன்றில் இருந்து 'கீச்... கீச்...' என குருவிக் குஞ்சுகளின் குரல் கேட்டது. அதைக் கண்ட தோழர் ஒருவர், புதருக்குள் நுழைந்து குஞ்சுகளை எடுத்து துணியில் வைத்துக் கொண்டார். இரை தேடி விட்டு திரும்பிய தாய்க்குருவி பரபரப்புடன் வந்தது. அவரது தலையைச் சுற்றி வட்டமடித்து பறந்தது. அதை பொருட்படுத்தாமல் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு அவர் வந்தார். பிறந்த குஞ்சுகளை காட்டிய போது, நாயகத்தின் மனம் இளகியது. தோழரிடம், ''இவை எங்கே கிடைத்தன'' எனக் கேட்டார். நடந்ததை சொன்னார் தோழர். ''தாயிடம் இருந்து குஞ்சுகளை பிரிப்பது பாவம். எங்கிருந்து எடுத்தீரோ, அங்கேயே விட்டு வாரும்'' என அனுப்பி வைத்தார்.