இரவுத்தொழுகை
UPDATED : ஜன 05, 2024 | ADDED : ஜன 05, 2024
பஜ்ருக்கு முன் இரண்டு ரகஅத்துகளை ஒருவர் தொழுதால் வலப்புறத்தின் மீது அவர் ஒருக்களித்துப்படுக்கட்டும். நபிகள் நாயகம் சுன்னத்திற்கும் பஜ்ருக்கும் இடையில் ஒருக்களித்துபடுப்பார். துாங்க மாட்டார். வலப்புறமாக படுப்பது ஆழ்ந்த துாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் சொல்லிக் கொடுத்த துாக்கத்தின் முறையும் அதுதான். இரவு தொழுகை, தஹஜ்ஜத் போன்ற தொழுகைகளை தொழுவோருக்கு ஒரு ஓய்வு எடுத்து கொள்ளும் விதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.