இரட்டிப்பு பலன் உண்டு
UPDATED : ஜன 05, 2024 | ADDED : ஜன 05, 2024
உழைத்தால் பணம் சேரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இதன்மூலம் மற்றொரு நன்மையும் கிடைக்கிறது. அது என்ன?உழைக்கும் நேரத்தில் பணியில் மட்டும் கவனம் இருப்பதால், பாவ எண்ணங்கள் தோன்றுவதில்லை. இதுவே சோம்பேறியாகத் திரிபவன் 'யாரிடம் உணவுக்கு திருடலாம்' என யோசிப்பான். எனவே கடுமையாக உழையுங்கள். நிறைய சம்பாதியுங்கள். அதை நல்ல விஷயங்களுக்கு செலவிடுங்கள். குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்திருங்கள்.