நம்பிக்கை
UPDATED : பிப் 19, 2024 | ADDED : பிப் 19, 2024
ஒருநாள் நபிகள் நாயகத்திடம் மனித வடிவில் வந்த வானவரான ஜிப்ரீல், ''ஈமான் (நம்பிக்கை) என்பது என்ன'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''இறைவனையும், அவனால் அருளப்பட்ட வேதங்களையும், வானவர்களையும், திருத்துாதர்களையும், மறுமையும் சத்தியம் என ஏற்பது. உலகில் நடப்பவை அனைத்தும் அவனது தரப்பில் இருந்து நடக்கிறது என நம்புவது'' என்றார். அதாவது ஈமான் (நம்பிக்கை) என்பது ஒருவரை நம்பி அவரது சொல்லை உண்மை என ஏற்பதாகும்.