உள்ளூர் செய்திகள்

ஆணவம் கொண்டவன்

ஒருநாள் வானவர்கள் 'லவ்ஹெ மஹ்பூழ்' என்ற பாதுகாப்புப் பலகையை பார்த்தனர். அதில், 'என்னுடைய நெருக்கமான ஓர் அடியான் விரைவில் என் சாபத்திற்கு ஆளாகி, கேவலமான நிலையை அடையப் போகிறான்' என்ற வாசகம் இருந்தது. இந்தக் கதிக்கு ஆளாக போவது யார் என வானவர்கள் கவலை அடைந்தனர். ஆனால் இப்லீேஸா அலட்சியத்துடன், 'இந்த வாசகங்கள் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ அல்ல. இந்த பலகையை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பார்த்து விட்டேன்' என்றபடி வானவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தான். தன் பதவியை எக்காரணம் கொண்டு பறிக்க முடியாது என்று ஆணவத்துடன் தெரிவித்தான்.