அமைதியான மனதிலே...
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவர். இன்னும் சிலரோ தற்பெருமையாக, 'கோபம் வந்தால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது' என்று சொல்லிச் சிரிப்பர். இது சரியா... என்றால் அதுதான் இல்லை. கோபம், பழிவாங்கும் குணம் ஒருவரின் நல்ல குணங்களை அழித்து விடும். அனைவருடைய அன்பையும் பெற முடியாது. மனநலம், உடல்நலம் பாதிக்கும். கோபத்தை விட்டு விட்டால் அனைத்து தீமைகளில் இருந்து தப்ப முடியும். மற்றவர்களின் குற்றம், குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள். மறப்போம்; மன்னிப்போம் என்ற மனநிலையுடன் வாழுங்கள். அமைதியும் நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள்.