அமைதி
UPDATED : மார் 31, 2024 | ADDED : மார் 31, 2024
ஒருநாள் நபிகள் நாயகம், ''தொழுகை, நோன்பு, தர்மம் இவற்றை விட சிறந்த செயல் ஒன்றை அறிவிக்கட்டுமா'' எனத் தோழர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ''அறிவியுங்கள். காத்திருக்கிறோம்'' என்றனர். ''மக்களை ஒருவருக்கொருவர் சமரசம் செய்து வையுங்கள். சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துங்கள்'' என்றார்.