உலகப்படைப்பு
UPDATED : ஏப் 18, 2024 | ADDED : ஏப் 18, 2024
படைப்புகள் அனைத்தும் ஜோடியாக படைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தும் இதிலடங்கும். இது சம்பந்தமாக குர்ஆனில் கீழ்க்கண்டவை இடம் பெற்றுள்ளன. * மனிதர்களே... உங்களை ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தோம். அதே ஆன்மாவில் இருந்து அதற்கு துணையையும் படைத்தோம். அவை இரண்டின் மூலமாக ஆண்கள், பெண்களை பரவச் செய்தோம். * மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் தாவரங்களை முளைக்கச் செய்தான். அதில் இருந்து அதன் ஜோடிகளையும் படைத்தான்.