உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையே அலைபோலே...

ஈஸா (அலை) நபி ஒருநாள் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ''கடலலை மீது யாராவது கட்டடம் எழுப்புவார்களா... கடலலை போன்றது இம்மை வாழ்க்கை. இது நிரந்தரமானது என்று கனவிலும் எண்ணாதீர்கள்'' என்றார் அவர். அதற்கு மக்கள், ''மறுமையில் எங்களுக்கு பயன்படும் விதத்தில் உபதேசம் செய்யுங்கள்'' எனக் கேட்டனர். ''வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். மனதை மயக்கும் விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள்'' என்றார்.