உள்ளூர் செய்திகள்

பழிக்குப்பழி

பத்ரு போரில் மெக்காவில் இருந்த குரைஷி பிரபுக்களில் முக்கியமானவர்கள் இறந்தனர். இதனால் அவர்கள் முஸ்லிம்களை பழிக்குப்பழி வாங்க நினைத்தனர். இதற்காக தங்களின் வியாபாரத்தில் வந்த லாபத்தை அபூஸூப்யான் என்பவரிடம் கொடுத்தனர். அவரிடம், ''முஹம்மது. நம் இனத்தவரைக் அழித்துவிட்டார். அவரை பழி வாங்க இது சரியான சந்தர்ப்பம். இதற்கு எங்களது வியாபாரத்தில் கிடைத்த லாபத் தொகையை செலவிடுங்கள்'' எனக் கேட்டனர். அவரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார்.