நற்கூலி
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
நல்ல எண்ணங்களை கொண்டே நல்ல செயல்கள் பிறக்கின்றன. எண்ணம் சரியானதாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். ஒரு செயல் இறைவனின் திருப்திக்காகச் செய்யப்பட்டால் மறுமையில் அதற்கான கூலி கிடைக்கும். பணம், புகழ் என ஒருவரின் தனிப்பட்ட தேவைக்காக செய்திருந்தால் மறுமையில் மதிப்பிருக்காது. 'உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ அவன் பார்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கிறான்'