புத்திமதி சொல்
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
ஒருமுறை நபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர், ''என் மனைவி அண்டை வீட்டாருடன் வீண் சண்டையிடுகிறாள். இதனால் அவர்கள் என்னை மதிப்பதில்லை. கோபத்தில் மனைவியை அடித்து விட்டேன். ஆனால் அவள் குழந்தைகளிடம் பாசமாகவும், உறவினர்களுடன் மரியாதையாகவும் நடக்கிறாள். எனக்கு வழிகாட்டுங்கள்'' என்றார். ''புத்திமதி சொல். ஆனால் மனைவியை அடிக்காதே'' என அறிவுரை சொல்லி அனுப்பினார்.