துணிவுடன் செயல்படு
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
பிரச்னை என்பது இயல்பான விஷயம். ஆனால் சிலர் அதற்கான தீர்வைத் தேடாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை கூடாது என்கிறது இஸ்லாம். * உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இறைவன் உங்கள் மீது அளப்பரிய கருணை கொண்டவனாக இருக்கிறான். * எந்தப் பொருளைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறாரோ மறுமையில் அந்த பொருளால் அவர் வேதனைக்கு ஆளாக நேரிடும். * இரும்பைக் கொண்டு தற்கொலை செய்தால் நரகத்தில் அந்த இரும்பாலேயே வயிற்றில் குத்திக் கொள்ள நேரிடும். * விஷம் அருந்தினால் மறுமையிலும் அந்த விஷத்தைக் குடிக்கும் கட்டாயம் ஏற்படும்.