தீர்ப்பு நாளில்...
UPDATED : மே 31, 2024 | ADDED : மே 31, 2024
மறுமை வாழ்வைக் கருதி தர்மசிந்தனையும், ஒழுக்கமும் கொண்டவர்களாக வாழுங்கள். இல்லாவிட்டால் பாவங்களும், தீமைகளும் தலைவிரித்தாடும். ஊழல் அதிகரிக்கும். கடைசியில் மறுமையில் நம்பிக்கை இல்லாத சமுதாயம் அழியும். ஆத், ஸமூத் கூட்டத்தினர்கள் தீர்ப்புநாள் மீது நம்பிக்கையற்றவராக இருந்தனர். இதனால் ஆத் சமூகத்தினர் சூறைக் காற்றாலும், ஸமூத் கூட்டத்தினர் மின்னல், இடியாலும் அழிக்கப்பட்டனர். ஏழு இரவு, எட்டு காலை பொழுதுகளிலும் தொடர்ந்து ஏவப்பட்டதால் அனைவரும் வேரற்ற மரமாக விழுந்து கிடந்தனர்.