மேகமே... மேகமே..
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
ஹஜ்ரத் இப்ராகிம் நபியை சந்தித்த வானவரான ஜிப்ரீல், ''முஸ்லிம்கள் வலம் வருவதற்காக ஒரு வீட்டைக் (காபா) கட்டுமாறு தங்களிடம் இறைவன் தெரிவிக்கச் சொன்னான்'' என்றார். அதற்கு இப்ராகிம், ''எந்த இடத்தில் கட்ட வேண்டும்'' எனக் கேட்க, அதற்கு ஜிப்ரீல், ''நீங்கள் சென்று கொண்டே இருங்கள். அந்த இடம் தெரிய வரும்'' என்றார். உடனே இப்ராகிம் ஒட்டகத்தில் புறப்பட்டார். அவரது தலைக்கு மேலே மேகம் ஒன்று வழிகாட்டியபடி சென்றது. கடைசியாக காபா இருக்கும் இடம் வந்ததும் அங்கேயே நிலை கொண்டது. அப்போது மேகத்தில் இருந்து, 'இந்த மேகம் எவ்வளவு விரிந்துள்ளதோ அந்தளவுக்கு கட்டவும்' என குரல் கேட்டது. அதன்படியே செய்தார் இப்ராகிம்.