உள்ளூர் செய்திகள்

காலம் சொல்லும்

வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். அனைவரும் நமக்கு நன்மை செய்வதில்லை. சில நேரங்களில் பெற்றோர், நண்பர்கள் கூட வேண்டாத செயலைச் செய்கின்றனர். கோபத்துடன் அவர்களைத் திட்டவோ, தண்டிக்கவோ செய்கிறோம். இது தவறான செயல். அன்புக்குரிய நபர்கள் பிடிக்காததைச் செய்தாலும் வெறுக்கக் கூடாது. காலம் பதில் சொல்லும். நீங்கள் நல்லவர் என்பதை அது உணர்த்தும். கோபத்தில் எதைச் செய்தாலும் அது நமக்கே தீங்காக முடியும்.