உள்ளூர் செய்திகள்

கூட்டுத் தொழுகை

ஒருவர் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட, மற்றொருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை ஈமானின் முன்னேற்றத்திற்கு காரணமாகிறது. மேலும் இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகிறது. இன்னும் எத்தனை அதிகப்பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகிறார்களோ, இறைவனிடத்தில் அது மிகவும் உகந்ததாகும். அந்த அளவு அவனுடன் தொடர்பு வலுப்பெறும்.