உள்ளூர் செய்திகள்

திறமையை கண்டறியுங்கள்

மாணவர்கள் சிலர் தங்களது திறமையை அறியாமல், கல்லுாரியில் சேர்கின்றனர். நண்பன் சேர்ந்துள்ளான், பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறினர், பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் சொன்னார்கள் என காரணத்தை கூறுகின்றனர். இது தவறானது. தனக்குள்ள திறமையை தெரிந்து, தகுதியான பிரிவை தேர்ந்தெடுத்தால்தான் எதிர்காலம் சிறக்கும். எனவே முதலில் திறமையை கண்டறியுங்கள்.