சகுனம் பார்க்காதீர்கள்
UPDATED : நவ 28, 2017 | ADDED : நவ 28, 2017
சகுனம் பார்த்து மோசம் போகிறவர்கள் உலகில் அதிகம். எங்கு புறப்பட்டாலும் பல்லி கத்தியது, பறவை கூவியது, ஆந்தை அலறியது என்று சொல்லி நடக்க வேண்டிய செயல்களை தடுத்து நிறுத்தி விடுகின்றனர். “சகுனம் பார்ப்பது இறைவனை நிராகரிக்கும் செயலாகும்,” என்கிறார் நாயகம்.ஆம்..இறைவனை முழுமையாக நம்பி செயல்களில் இறங்க வேண்டுமே தவிர, சகுனம் பார்த்து தொடங்கக்கூடாது. “பறவை அலறினால் கூட, அவற்றை விரட்டிஅடிக்க கூடாது,”என்கிறார் நாயகம்.