முயற்சியே வெற்றிக்கு மூலதனம்
UPDATED : நவ 16, 2021 | ADDED : நவ 16, 2021
மனிதர்கள் அனைவரும் பலவித கனவுகளை கொண்டிருப்பர். அவற்றை நனவாக்க சிலர் கூடுதல் முயற்சி செய்வர். ஆனால் பலரோ தோல்விகளை அடைவர். அப்படி தோல்வி அடைந்தவர்கள், ''என்னால் ஆன முயற்சிகளை எடுத்துவிட்டேன். இனி முயற்சியில் வெற்றி பெறச்செய்வது உன் பொறுப்பு'' என இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு பொறுப்புகளை அவனிடம் ஒப்படையுங்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டை தருகிறார் நாயகம். ஒட்டிய வயிற்றுடன் காலையில் உணவை தேடிச்செல்லும் பறவை, மாலையில் வயிறு நிரம்பியபடி திரும்புகிறது.அது கூட்டினுள் இருந்தால் உணவு கிடைப்பதில்லை. இதைப்போலவே மனிதனும் முயற்சி செய்தால் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். முயற்சியே வெற்றிக்கு மூலதனம்.