பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
UPDATED : நவ 12, 2021 | ADDED : நவ 12, 2021
நம்மை பார்க்க யாராவது வருவார்கள். அப்போது நாம் வேறு ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருப்போம். அதனால் அவர்களிடம் சரியாக பேசமாட்டோம். ஒருவேளை தவறாக பேசிவிடுவோம். அவர்கள் சென்றபிறகு 'நாம் சரியாக பதில் சொன்னோமா, அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார். நிதானமாக பேசி இருக்கலாமோ' என பலவித சிந்தனைகள் எழும்.சில சமயங்களில் நமது பேச்சை அவர்கள் சாதரணமாகத்தான் எண்ணியிருப்பர். ஆனால் நாமோ அதை குறித்து சிந்தித்து பல வேலைகளை மறந்துவிடுகிறோம். எனவே பிறருடன் பேசும்போது கவனமாக இருங்கள். இல்லையென்றால் அவர்கள் சொல்வதை கேட்டு அமைதியாக இருந்துவிடுங்கள். இப்படி செய்தால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே.