உள்ளூர் செய்திகள்

இதுவும் கடந்து போகும்

இன்று எங்கு பார்த்தாலும் பரபரப்பான மனிதர்கள். ஓட்டமும், நடையுமாக வாழ்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் உண்மை ஒன்று புரியவரும். அது என்ன... எத்தனை விதமான மனிதர்களை வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவர்கள் தற்போது நம்முடன் இருக்கிறார்களா.. என்றால் இல்லை. அவ்வளவுதாங்க வாழ்க்கை. இதை உணரும்போது உங்களுக்கு கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல.நல்ல மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் வரும்போது 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினையுங்கள். அவர்கள் இருக்கும்போதே மரியாதை செய்யுங்கள். அவர்கள் இல்லாதபோது பெரிதும் பாதிக்கப்படாமல் இருங்கள்.