முதன்முதலில்
UPDATED : அக் 06, 2023 | ADDED : அக் 06, 2023
மெக்கா நகருக்குக் கிழக்கேயுள்ள ஹிரா மலைக் குகையில் நபிகள் நாயகம் தியானத்தில் இருந்தார். அச்சமயம் இறைவன் தன்னுடைய நபியாக அவரைத் தேர்ந்தெடுத்து நபித்துவத்தையும், குர்ஆனையும் கொடுத்தருளினான். அப்போது 'உம்மீயாக' அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவராக நபிகள் இருந்ததாக இறை வசனத்தில் கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் குர்ஆனை மனனம் செய்ததும் நபிகளே ஆவார். இதன் அத்தியாயங்கள் கட்டம் கட்டமாக 23 வருடங்களில் அறிவிக்கப்பட்டன.