வளமான வாழ்க்கைக்கு...
UPDATED : ஏப் 29, 2022 | ADDED : ஏப் 29, 2022
இன்றைய காலத்தில் அண்டைவீட்டார் பற்றி நாம் எந்த கவனமும் செலுத்துவதில்லை. அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதே இதற்கு காரணம். தற்போது மேலைநாடுகளில் புதிதாக அண்டைவீட்டில் குடிவருபவர்களின் விவரங்களை துப்பறியும் நிறுவனம் மூலம் அறிந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் சிந்திக்கின்றனர். ஏனெனில் அண்டை வீட்டார் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மறுமையிலும் ஒரு வளமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது.'தன் அண்டை வீட்டாருக்கு யார் சிறந்தவரோ அவரே இறைவனிடத்தில் சிறந்தவர்' என்கிறார் நாயகம்.