கடவுளுக்கு கடன் கொடுங்கள்
UPDATED : ஏப் 19, 2019 | ADDED : ஏப் 19, 2019
ஏழைகளும் நம்மைப் போல் இன்பமாக இருக்கட்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். தனக்கு இருந்த உணவைக் கூட கொடுத்து உதவினார் நபிகள் நாயகம். “செல்வத்தால் பெறும் இன்பத்தை விட கடவுள் அருளால் பெறும் இன்பம் சிறந்தது. பிறருக்கு கொடுப்பவன் கடவுளுக்கே கடன் தருகிறான். தர்மம் செய்பவனுக்கு அதன் பயன் இரு மடங்காக கிடைக்கும். செய்கின்ற தானத்தை கைம்மாறு கருதாமல் செய்ய வேண்டும். உழைத்து தேடிய செல்வம் குறைவாக இருந்தாலும், இயன்றதை மறுக்காமல் கொடுப்பவனே சிறந்தவன். தானம் அளிக்கும் போது முதலில் கடவுளின் கைக்குச் சென்ற பின்னரே அது ஏழையின் கைக்குச் செல்கிறது” என்கிறார்.