சிறந்த செயல்
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
நபிகள் நாயகத்திற்கு குர்ஆன் வசனங்கள் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் மூலம் இறைவனால் அருளப்பட்டது.'குர்ஆன்' எனும் அரபி மொழிச் சொல்லுக்கு ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது என்று பொருள். இதில் மனித குலத்திற்குத் தேவையான அம்சங்கள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதை ஓதுவது ஈமான் கொண்ட மக்களின் கடமையாகவும் உள்ளது. நபிகளாரின் சொல், செயல், அவரது அங்கீகாரம் பெற்றவைகளே தற்சமயம் 'ஹதீஸ்' என்று அழைக்கப்படுகிறது. இதில் குர்ஆனுக்கு விளக்கம் காணுதல், நபி வழியில் எப்படி சிறந்த முறையில் செயல்களை செய்ய வேண்டும் போன்றவை கூறப்பட்டுள்ளது. இப்படி இவரது வழியில் எந்தவொரு செயல் செய்தாலும் அது 'சுன்னத்' என்றும் அழைக்கப்படுகிறது.