நல்லிணக்கம் வேண்டும்
UPDATED : மார் 30, 2018 | ADDED : மார் 30, 2018
பிற மதத்தினருடன் நல்லிணக்கமாக இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. குர்ஆன் ஹதீஸ் 8:61, ''எதிரிகள் எதிர்த்தால் நாமும் எதிர்க்கலாம். சமாதானமாக இருக்க விரும்பினால் நாமும் சமாதானமாகவே இருக்க வேண்டும்,” என்கிறது.குர்ஆனின் இந்த வழிகாட்டலுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மற்றவர்களுடன் பிரச்னை உருவாக காரணமாக இருக்கக் கூடாது. மற்றவர் எதிர்த்தாலும் கூட நிதானமாக செயல்பட வேண்டும். அப்போது பிரச்னைக்கு இடமே இருக்காது.