எனக்கு உதவி செய்
UPDATED : செப் 29, 2023 | ADDED : செப் 29, 2023
முஆத் என்பவரிடம் நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு கூறினார்: ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இவ்வாறு பிரார்த்தனை செய்.'இறைவா! திக்ர் - உன்னை நினைவுகூறும் விஷயத்திலும், ஷுக்ர் - உனக்கு நன்றி செலுத்தும் விஷயத்திலும், நல்ல வணக்கத்தின் விஷயத்திலும் எனக்கு உதவி செய்' இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிடாதீர். இதில் கூறப்பட்டுள்ள விஷயம்: வாழ்வின் எல்லா நிலைகளிலும் இறைவனை நினைத்து, நன்றி செலுத்துபவனாக ஒருவர் திகழ வேண்டும். நல்ல முறையில் அவனை வணங்க வேண்டும். 'நான் பலவீனனாக இருக்கிறேன். உன் உதவியில்லாமல் இந்தப் பணிகள் நடைபெற முடியாது' என அவர் நினைப்பது அவசியம்.