உதவி செய்
UPDATED : அக் 20, 2023 | ADDED : அக் 20, 2023
ஹசீம் பின் ஹிஷாம் என்னும் தோழர் நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுக்கொண்டே இருந்தார். அவரும் மறுப்பு ஏதும் கூறாமல் செய்து வந்தார். ஒருநாள் அவரை திருத்தும் நோக்கில், ''உதவி கேட்பதை விட உழைத்து பொருள் சேர்ப்பது சிறந்தது. அதைவிட அப்படி சேர்த்த பொருளில் கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வது சிறப்பானது'' என அறிவுரை கூறினார். அதை ஏற்ற ஹிஷாம், ''இறைவன் மீது ஆணையாக எவரிடமும் உதவி கேட்க மாட்டேன்'' என சபதம் செய்தார். அதுமட்டும் அல்ல நாயகம் மறைந்தபின்பும் கூட அந்த சபதத்தை தொடர்ந்தார். தோழர்களான அபூபக்கர், உமர் தங்களது செல்வத்தை ஹிஷாமுக்கு கொடுக்க முன்வந்தனர். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.