உள்ளூர் செய்திகள்

எப்படியெல்லாம் உதவலாம்?

அபூமூஸா அல்ரதி என்பவரிடம் நபிகள், “தர்மம் செய்வது ஒவ்வொருவரின் அவசியக் கடமை” என்றார். “அவரிடம் பணம் இல்லையென்றால் என்ன செய்வது?” என்று அபூமூஸா கேட்டார்.“அவன் உழைக்க வேண்டும். தனது சம்பாத்தியத்தில் தான் அனுபவிப்பதோடு பிறருக்கும் கொடுக்க வேண்டும். அதுவும் முடியவில்லை எனில் தேவையுள்ள, துன்பப்படுகிற மனிதருக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டு செய்ய வேண்டும். மக்களை பிறருக்கு நன்மை புரியும்படி துாண்டுவதும், பிறருக்கு தீங்கிழைக்காதிருப்பதும் கூட நற்செயலே” என்றார். யார் ஒருவர் பிறருக்கு நன்மை செய்கிறாரோ அவருக்கு தேவைப்படும் நேரத்தில் இறைவன் உதவி செய்வான்.