அவனுக்காகவே செய்தேன்
UPDATED : செப் 29, 2023 | ADDED : செப் 29, 2023
'ஒருவர் இறைவனுக்காகவே நட்பு, பகை கொள்கிறார். அவனுக்காகவே கொடுக்கிறார், கொடுக்காமல் இருக்கிறார் என்றால் அவர் தமது ஈமானை (நம்பிக்கையை) நிறைவு செய்தவர் ஆகிறார்' ஒருவர் பல்வேறு அனுபவங்களை பெற்ற பிறகு இந்த நிலைக்கு வருகிறார். அப்பேது அவர் யாரிடம் நட்புக் கொண்டாலும், எவரிடம் உறவை முறித்தாலும் இறைவனின் திருப்திக்காகவே அவ்வாறு செய்கிறார். இதற்கு காரணம் தீனின் (இறைநெறியின்) மீதுள்ள பற்றுதான்.